எடப்பாடி: ஞாயிற்றுக்கிழமை முழுபொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் எடப்பாடி நகரின் பெரும்பாலான வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
கரோனா நோய்த்தொற்றினை கட்டுப்படுத்திடும் நோக்கில், தமிழக அரசு மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமையில் தளர்வுகள் அற்ற முழு போது முடக்கத்தினை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான இடங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
குறிப்பாக எடப்பாடி பேருந்து நிலையம், உழவர் சந்தை, ராஜாஜி பூங்கா காய்கறி மார்க்கெட், நகராட்சி அங்காடி, சின்னக்கடை வீதி, பஜார் தெரு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வீதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
நகரின் ஒரு சில இடங்களில் மருத்துவமனைகள், தனியார் மருந்தகங்கள், பால் விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.
நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் காவல்துறையினர் தடுப்புகளை ஏற்படுத்தி தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளத்தில் ரூ.100 கோடி வசூலித்த வாழ - 2..! புதிய சாதனை!
நாட்டின் அரசியல் வரைபடத்தையே மாற்றும் முயற்சி! ராகுல் காந்தி

மிஸ்பண்ணிடாதீங்க... இந்தியன் வங்கியில் 350 சிறப்பு அலுவலர் பணி!

காங்கிரஸ் தலைவர் பவன் கேராவுக்குப் பாதுகாப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


