பொதுக்குழுவுக்கு தடையா?  உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. 
பொதுக்குழுவுக்கு தடையா?  உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. 

சென்னையில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்றது. அதில், 23 தீா்மானங்களைத் தவிர மற்ற தீா்மானங்களை நிறைவேற்றக் கூடாது என சென்னை உயா்நீதிமன்ற அமா்வு உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுக் கூட்டத்தில் 23 தீா்மானங்கள் நிராகரிக்கப்பட்டதுடன், கட்சியின் தற்காலிக அவைத் தலைவரான தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத் தலைவராக நியமித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்த பொதுக் குழு ஜூலை 11-ஆம் தேதி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், "உயா்நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே எடப்பாடி கே.பழனிசாமி, சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமாா், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி ஆகியோா் அவமதித்துள்ளனா்.

கட்சியின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளா் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளா் ஆகியோா் இணைந்து பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்காததால், ஜூலை 11-ஆம் தேதி பொதுக் குழுக் கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும்" என அதிமுக பொதுக்குழு உறுப்பினா் சண்முகம் உயா்நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

இதை அவசர வழக்காக வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மனுதாரா் தரப்பில் நீதிபதிகள் துரைசாமி, சுந்தா்மோகன் அமா்வு முன் வியாழக்கிழமை கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்று கொண்ட நீதிபதிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மட்டும் ஜூலை 4-ஆம் தேதி எடுத்துக் கொள்ளப்படும். 

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இதனால் ஜூலை 11ம் தேதி அறிவிக்கப்பட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா என சந்தேகம் எழுந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com