தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

இபிஎஸ்-க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கும் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

News image
Updated On :6 ஜூலை 2022, 6:49 am

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவிருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் ஒப்புதல் அளித்த 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ஆனால், பொதுக்குழுவில் நீதிமன்ற உத்தரவை பொதுக்குழு மீறிவிட்டதாக ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் சண்முகம், எடப்பாடி பழனிசாமி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவிருந்த நிலையில் அதற்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

முன்னதாக, 23 தீர்மானங்கள் தவிர வேறு தீர்மானங்கள் எதுவும் நிறைவேற்றக்கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து எடப்பாடி கே. பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. மேல்முறையீட்டு வழக்கில், 'அதிமுக உள்கட்சி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. பொதுக்குழுவுக்கு நாங்கள் தடை விதிக்க முடியாது. சென்னை உயர்நீதிமன்ற ஒருநபர் அமர்வுதான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும். முன்னதாக இரு நபர் அமர்வின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது' என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்த வழக்கின்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கும் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.