அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையில்லை: உச்சநீதிமன்றம்

ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதிமுக பொதுக்குழுவுக்குத் தடையில்லை: உச்சநீதிமன்றம்

ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்படாத புதிய தீா்மானங்களை நிறைவேற்றுவதற்கு சென்னை உயா்நீதிமன்றம் தடை விதித்தது. 

இந்த உத்தரவை எதிா்த்து தமிழக முன்னாள் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது. 

அதில், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். 

முன்னதாக, 'அதிமுக உள்கட்சி விவகாரத்தில் நாங்கள் எப்படி தலையிட முடியும்? சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற ஒரு நபர் அமர்வு தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும். 

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. பொதுக்குழு தொடர்பாக எந்த உத்தரவும் நாங்கள் பிறப்பிக்கப்போவதுமில்லை' என்று கூறிய நீதிபதிகள், இரு தரப்பினரும் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். 

மேலும், ஜூன் 23 அதிமுக பொதுக்குழுவில் புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வின் உத்தரவுக்கும் உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்ததுடன், பொதுக்குழு குறித்து முடிவெடுக்க ஓபிஎஸ் தரப்பு, சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அமர்வை நாடலாம் என்று கூறியுள்ளது. 

இதையடுத்து அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தனி நபர் அமர்வுக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com