புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு கோரி காவல்ஆணையர் அலுவலகத்தில் மனு 

அதிமுக பொதுக்குழு குறித்து திங்கள்கிழமை நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

News image

ஜெயக்குமார் (கோப்புப்படம்)

Updated On :8 ஜூலை 2022, 12:40 pm

DIN

அதிமுக பொதுக்குழு குறித்து திங்கள்கிழமை நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி காவல்ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தபின் அவர் பேட்டியளித்தாவது, சமூக விரோதிகளை அதிமுக அலுவலகத்தில் நுழையாமல் தடுக்கவே போலீஸ் பாதுகாப்புக் கோரியுள்ளோம். எங்களுக்கு கிடைத்த தகவல்படியே நடவடிக்கை எடுக்கிறோம். அதிமுக பொதுக்குழு குறித்து திங்கள்கிழமை நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். 

நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று 100% நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். சென்னையில் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக் குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம் உயா் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். இம்மனு மீது இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடைபெற்றது. 

இருத் தரப்பு வாதங்கள் நிறைவு பெற்றதைதொடர்ந்து, வரும் 11ஆம் தேதி காலை 9 மணிக்கு பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கில் தீர்ப்பளிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்துள்ளார். வரும் திங்கள்கிழமை காலை 9.15 மணிக்கு அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில் 9 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.