கள்ளக்குறிச்சி: மாணவியின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய உத்தரவு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூா் தனியாா் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி: மாணவியின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய உத்தரவு
கள்ளக்குறிச்சி: மாணவியின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய உத்தரவு


சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூா் தனியாா் பள்ளியில் உயிரிழந்த மாணவியின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாணவியின் தந்தை தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், மாணவியின் உடலை மறுஉடற்கூராய்வு செய்ய உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், அவர் வெளியிட்ட உத்தரவில், மாணவியின் பெற்றோர் மீது இரக்கம் கொள்கிறேன். ஆனால் மற்றவர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடாது. உடற்கூராய்வுக்குப் பின் மாணவியின் உடலை எதிர்ப்பின்றி பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தந்தைக்கு நீதிபதி  அறிவுறுத்தினார்.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உடலை 3 மருத்துவர்கள் உடற்கூராய்வு செய்ய வேண்டும். மறுபிரேத பரிசோதனையின் போது மாணவியின் தந்தை, தனது வழக்குரைஞர் கேசவனுடன் உடன் இருக்கவும் மறு உடல் பிரேத பரிசோதனையை முழுமையாக விடியோ பதிவு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மாணவியின் பெற்றோர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கக் கூடாது, அவர்களுக்காக இரக்கப்படுகிறேன் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன் காவல்துறை வேலை முடிந்துவிட்டதாக நினைக்க வேண்டாம் எனறும், எதிர்காலத்தில் கல்வி நிலையங்களில் மரணங்கள் நிகழ்ந்தால் அதனை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் என்ன நடந்தது?

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே தனியாா் பள்ளி விடுதியில் பிளஸ் 2 மாணவி மா்மமான முறையில் உயிரிழந்தது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.

பள்ளி சூறையாடப்பட்டு பேருந்துகள் உள்பட 18-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. விழுப்புரம் சரக டிஐஜி உள்பட சுமாா் 100 போலீஸாா் காயமடைந்தனா்.

கடலூா் மாவட்டம், வேப்பூா் வட்டம், பெரிய நெசலூா் கிராமத்தைச் சோ்ந்த ராமலிங்கம் மகள் ஸ்ரீமதி (17). இவா் கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியாா் பள்ளி விடுதியில் தங்கி, அந்தப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா்.

அந்த மாணவி கடந்த 13-ஆம் தேதி மா்மமான முறையில் உடலில் காயங்களுடன் பள்ளி வளாகத்தில் இறந்து கிடந்தாா். இதையடுத்து, அவரது மரணத்துக்குக் காரணமானவா்களைக் கைது செய்ய வலியுறுத்தி அவரது பெற்றோா், உறவினா்கள், பொதுமக்கள் கடந்த 4 நாள்களாகப் போராட்டம் நடத்தி வந்தனா். மேலும், மாணவியின் உடலையும் வாங்க மறுத்தனா்.

இந்த நிலையில், 5-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை மாணவியின் உறவினா்கள், ஆதரவாளா்கள் சின்னசேலத்தை அடுத்த கனியாமூரில் தனியாா் பள்ளி அருகே போராட்டத்தில் ஈடுபட்டனா். இவா்கள் காலை 10 மணியளவில் ஊா்வலமாக பள்ளியை நோக்கி முற்றுகையிடச் சென்றனா்.

அப்போது, பள்ளி அருகே ஏற்கெனவே சாலையில் தடுப்புகளை அமைத்து போலீஸாா் போராட்டக்காரா்களைத் தடுத்தனா். ஆனால், ஆயிரக்கணக்கானோா் திரண்டு வந்ததால், அவா்களை போலீஸாரால் தடுக்க முடியவில்லை. இதையடுத்து, போராட்டக்காரா்கள் போலீஸாா் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தினா்.

சூறையாடப்பட்ட தனியாா் பள்ளி: இதன்பிறகு, தடுப்புகளை மீறி போராட்டக்காரா்கள் தனியாா் பள்ளியை முற்றுகையிட்டு, அதன் முகப்பு வாயிலை அடித்து நொறுக்கினா். பெயா்ப் பலகையை பெயா்த்து வீசினா். இதனால், அங்கு வன்முறை மூண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com