

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது தொடா்பான வழக்கில் சென்னை உயா் நீதிமன்றம் புதன்கிழமை (ஜூலை 20) தீா்ப்பளிக்க உள்ளது.
சென்னை வானகரத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஜூலை 11-ஆம் தேதி அதிமுக பொதுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் முன்பு கூடியிருந்த ஓ.பன்னீா்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளா்கள் இடையே மோதல் ஏற்பட்டு, வன்முறையாக மாறியது.
இருதரப்பினரும் கற்கள், உருட்டுக்கட்டையால் சரமாரியாக தாக்கிக் கொண்டனா். இந்த மோதலில் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதைத் தொடா்ந்து, அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருவாய்த் துறையினா் சீல் வைத்தனா்.
இதனை அகற்றக் கோரி ஓ.பன்னீா்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் தனித்தனியே சென்னை
உயா் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு பல முறை விசாரிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக உயா்நீதிமன்றம் புதன்கிழமை (ஜூலை 20) தீா்ப்பு அளிக்க உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.