மாநிலங்களவை: திமுக எம்.பி.க்கள் உள்பட 19 பேர் இடைநீக்கம்

மாநிலங்களவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் உள்பட 19 பேரை இடைநீக்கம் செய்வதாக அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவை: திமுக எம்.பி.க்கள் உள்பட 19 பேர் இடைநீக்கம்

மாநிலங்களவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் உள்பட 19 பேரை இடைநீக்கம் செய்வதாக அவையின் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை நடத்தவிடாமல் தொடர் அமளியில் ஈடுபட்ட காரணத்திற்காக திமுக எம்.பி.க்கள் 6 பேர் உள்பட 19 பேர் இன்று இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

திமுக

  1. எம்.எம். அப்துல்லா
  2. எஸ். கல்யாணசுந்தரம்
  3. ஆர். கிரிராஜன்
  4. என்.ஆர். இளங்கோ
  5. எம். சண்முகம்
  6. கனிமொழி என்விஎன் சோமு

திரிணமூல் காங்கிரஸ்

  1. சுஷ்மிதா தேவ்
  2. மெளசம் நூர்
  3. நதிமுல் ஹக்
  4. சாந்தா சேட்ரி
  5. டோலாசென்
  6. சான்டனு சென்
  7. அபி ரஞ்சன் பிஷ்வர்

டிஆர்எஸ்

  1. லிங்கையா யாதவ்
  2. ரவிஹாந்தரா வத்திராஜு
  3. தாமோதர் ராவ்

இந்திய கம்யூனிஸ்ட்

  1. பி.சந்தோஷ் குமார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

  1. வி.சிவதாசன்
  2. ஏ.ஏ. ரஹிம்

இவர்கள் 19 பேரும் இந்த வாரம் முழுவதும் மாநிலங்களவை அலுவல்களில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, அமளியில் ஈடுபட்ட காரணத்திற்காக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர்கள் ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்பட 4 பேர் நேற்று இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ஆம் தேதி தொடங்கிய நிலையில், விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் செய்த அமளியால் ஒரு வாரமாக மக்களவை மற்றும் மாநிலங்களவை முடங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com