திருச்சி: திருச்சியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் திரைப்பட நடிகர் அஜித் பங்கேற்றார்.
திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப் அமைந்துள்ளது. இதில், 47 ஆவது மாநில துப்பாக்கி சுடும் போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த 24 ஆம் தேதி தொடங்கிய இப் போட்டிகள் தொடர்ந்து ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 1,200 பேர் பங்கேற்றுள்ளனர்.
10 மீட்டர், 25 மீட்டர், 50 மீட்டர் அளவில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 16,19,21, மற்றும் 21 - 45, 45-60 வயதினருக்கான பிரிவின் கீழ் போட்டியாளர்கள பங்கேற்கின்றனர்.
இந்த போட்டியில் திரைப்பட நடிகர் அஜித் கலந்து கொண்டார். இதில் பங்கேற்க கார் மூலம் புதன்கிழமை காலை திருச்சி வந்தார். முதலாவதாக சீனியர் மாஸ்டர் பிரிவில் பங்கேற்ற அவர்,தொடர்ந்து 4 பிரிவிகளிலும் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்கிறார்.
அஜித் வருகையை முன்னிட்டு ரைபிள் கிளப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிளப்புக்கு வெளியே பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ரசிகர்கள் ஆராவாரம் எழுப்பியபடி அவரைக் காண காத்திருகின்றனர்.
போட்டியினுடைய துப்பாக்கி சுடும் தளத்திலிருந்து மேலாளர் அறைக்கு அவர் வந்தபோது வெளியே காத்திருந்த ரசிகர்கள் அவரைக் காணும் ஆவலில் கிளப் உள்ளே நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிக்க | ஒவ்வாமை, கடி நஞ்சினை நீக்குமா நாகவல்லி…?
முன்னறிவிப்பு ஏதுமின்றி அஜித் திருச்சி வந்திருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தொடர்ச்சியாக 2-ஆவது வெற்றி..! ஸ்காட்லாந்தை வீழ்த்தியது மேற்கிந்தியத் தீவுகள்!
பெத்தி - இரு வாரங்களில் ரூ. 400 கோடி வசூல்!
நீட் தேர்வெழுதுவோரில் 35% பேர் வெறும் 3 மாநிலங்களைச் சேர்ந்தோர்! அதிர்ச்சி தரும் தரவுகள்!

ஐ.நா.வில் ஜம்மு - காஷ்மீா் விவகாரம்: பாகிஸ்தான், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா கண்டனம்
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK



