கொடநாடு வழக்கு: உதகை மகளிர் நீதிமன்றம் ஒத்திவைப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஆகஸ்ட் 26-க்கு உதகை மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 
கொடநாடு எஸ்டேட்
கொடநாடு எஸ்டேட்

நீலகிரி: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஆகஸ்ட் 26-க்கு உதகை மகளிர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தேயிலை எஸ்டேட், பங்களா உள்ளது. அங்கு 2017 ஏப்ரல் 24ஆம் தேதி இரவுப் பணியில் இருந்த காவலாளி ஓம் பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன், எஸ்டேட்டுக்குள் நுழைந்து பொருள்கள் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றது.

இந்த வழக்கு விசாரணை 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், விசாரணையை தீவிரப்படுத்துவதற்காக 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டு கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதாவிடம் காா் ஓட்டுநராக இருந்து பின்னா் கொடநாடு கொலை வழக்கின் முக்கிய எதிரியாக கருதப்பட்ட, விசாரணையின்போது விபத்தில் உயிரிழந்த கனகராஜ் குறித்தும் குணசேகரனிடம் தனிப் படையினா் விசாரணை நடத்தியுள்ளனா்.

கொடநாடு வழக்கில் கனகராஜ் சகோதரர் தனபால், ரமேஷ் ஆகியோரின் ஜாமீன் நிபந்தனைகளில் மாற்றம் செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. கனகராஜ் சகோதரர் தனபால், ரமேஷ் 1, 15-ம் தேதிகளில் சோலூர்மட்டம் காவல்நிலையத்தில் கையெழுத்திட உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று வழக்குக் குறித்த விசாரணை உதகை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் ஆஜரான அரசு தரப்பு வழக்குரைஞர் கனகராஜ் மற்றும் ஷாஜகான் ஆகியோர், இவ்வழக்கில் தற்போது வரை 267 பேருக்கு அதிகமானோரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. 

கனகராஜின் சாலை விபத்து குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருவதால் அரசு தரப்பு வழக்குரைஞர் கூடுதல் அவகாசம் கேட்டனர். 

இந்நிலையில் ஆகஸ்ட் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  2017 ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தின்போது தடயங்களை தடயவியல் துறையினர் சேகரித்தனர். காவல்துறையினரிடம் விசாரணை நடத்தப்படும் என்று அரசு தரப்பில் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com