மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

‘சட்டம் - ஒழுங்கை காப்பதில் தமிழக காவல் துறை முன்னோடி’

சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழக காவல் துறை முன்னோடியாக உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார். 

News image

வெங்கையா நாயுடு

Updated On :31 ஜூலை 2022, 6:00 am

சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழக காவல் துறை முன்னோடியாக உள்ளதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு புகழாரம் சூட்டியுள்ளார். 

சென்னை எழும்பூரில் தமிழக காவல் துறைக்கு குடியரசுத் தலைவர் கொடி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த விழாவில் குடியரசுத் தலைவர் கொடியை வெங்கையா நாயுடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைத்தார். 

அதனைத் தொடர்ந்து குடியரசு துணைத் தலைவருக்கு நினைவுப் பரிசாக சதுரங்க அட்டையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

பின்னர் குடியரசுத்தலைவர் பேசியதாவது, தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை காப்பதில் காவல் துறை முன்னோடியாக உள்ளது. விலைமதிப்பற்ற 10 சிலைகளை வெளிநாடுகளிலிருந்து தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் மீட்டுள்ளனர். 

கடத்தப்பட்ட சிலைகளை மீட்டு, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதில், காவல் துறை கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். 

அதிக அளவில் நடைபெறும் சைபர் குற்றங்களை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வெங்கையா நாயுடு குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.