தமிழகத்தில்  99% பேருக்கு இந்த வகை கரோனா அதிகம் பரவுகிறது? அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில்  99% பேருக்கு பிஏ2 வகை கரோனா தொற்று அதிகம் பரவுகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்(கோப்புப்படம்).
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன்(கோப்புப்படம்).

சென்னை: தமிழகத்தில்  99% பேருக்கு பிஏ2 வகை கரோனா தொற்று அதிகம் பரவுகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை 100-க்கும் கீழ் உள்ளது. உயிரிழப்பும் இல்லாத நிலை உள்ளது. விஐடி கல்லூரியில் மேலும் 45 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. . ஐஐடியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் குணமடைந்துள்ளனர்.  

ஒமைக்ரான் வகை தொற்றைப் பொறுத்த வரையில் 7 வகை உள்ளது. அதன்படி,பிஏ1,பிஏ2,பிஏ3,பிஏ4,எக்ஸ்இ உள்ளிட்ட ஏழு வகையிலான தொற்று உள்ளது. அந்த வகையில், தற்போது பெரும்பாலும் 99% பேருக்கு பிஏ2 கரோனா தொற்று உள்ளது. மக்கள் அச்சப்பட தேவையில்லை. தமிழகத்தில் விரைவில் கரோனா தொற்று கட்டுக்குள் வந்துவிடும் என்று கூறியுள்ளார்.

கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை, செங்கல்பட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி நிலவரப்படி தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 22 ஆக இருந்த  நிலையில் தற்போது  100-ஐ எட்டியுள்ளது. 

அடுத்தடுத்த நாள்களில் கரோனா பாதிப்பு உயர வாய்ப்பு உள்ளதால் அடுத்த 2 வாரத்திற்கு சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com