
தமிழகத்தில் உள்ள பேருந்துகளில் இந்தாண்டு இறுதிக்கும் ‘இ-டிக்கெட்’ அறிமுகப்படுத்தப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | இந்தியாவை ஒன்றிணைக்கும் நேரம் இது: ராகுல் ட்வீட்
இதுகுறித்து அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது:
பேருந்துகளில் இந்தாண்டு இறுதிக்கும் வழக்கமான பயணச்சீட்டிற்கு பதிலாக ‘இ-டிக்கெட்’ அறிமுகப்படுத்தப்படும். இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தவுடன் ஜி-பே, மொபைல் ஸ்கேனிங் மூலம் பேருந்துகளில் டிக்கெட் பெறலாம்.
மேலும், பள்ளி மாணவர்கள் பேருந்தில் பயணம் செய்ய ஸ்மார்ட் கார்ட் வழங்கப்படும். ஸ்மார்ட் கார்டு வழங்குவதற்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.