
தமிழகத்தில் கரோனா நிலவரம்: அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார் ராதாகிருஷ்ணன்
சென்னை: தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மிக முக்கியமான 5 மாவட்டங்களில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது மருத்துவத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் இந்த தகவலை தெரிவித்தார்.
தமிழகத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு, கோவை ஆகிய 5 மாவட்டங்களில் கரோனா பரவல் அதிகமாக உள்ளது.
இதையும் படிக்க.. பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டிய 15 விஷயங்கள்
மேலும், தமிழகத்தில் கரோனா அதிகரித்து வருகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் வரும் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படவிருக்கும் நிலையில் கரோனா தொற்று அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியருப்பது கவலைதரும் தகவலாக உள்ளது.