செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு அதிகரிப்பு: மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 250 கன அடியிலிருந்து 500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 
செம்பரம்பாக்கம் ஏரி
செம்பரம்பாக்கம் ஏரி


செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு வினாடிக்கு 250 கன அடியிலிருந்து 500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 

கிருஷ்ணா நதி நீர் வரத்தாலும், கடந்த மூன்று நாள்களாக இரவு நேரங்களில் பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில், செம்பரம்பாக்கம் ஏரியில் புதன்கிழமை காலை நேர நிலவரப்படி நீர்மட்டம் உயரம் 23.60 அடியாகவும், மொத்த கொள்ளளவு 3540 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து 775 கன அடியாகவும் உள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த நீர்மட்ட உயரம் 24 அடி ஆகும். தற்போது ஏரியின் நீர்மட்டம் 23.60 அடியாக உள்ளது. ஏரியின் நீர்மட்ட உயரத்தை 23.50 அடியில் வைத்து கண்காணிக்க பொதுப்பணித் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். 

இந்நிலையில், ஏரியில் முதற்கட்டமாக 250 கன அடி நீர் உபரி நீர் திறக்கப்பட்டு வந்தநிலையில், செவ்வாய்க்கிழமை இரவு பெய்த மழை காரணமாக, கிருஷ்ணா கால்வாய் நீர்வரத்து 775 கன அடியாக அதிகரித்துள்ளதால் செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது.

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதன்கிழமை காலை 9 மணியளவில் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் 250 கன அடியில் இருந்து 500 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. 

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் திருமுடிவாக்கம், வழுதலம்பெடு, நந்தம்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அணையிலிருந்து கூடுதலாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஏரியின் கரையோரப் பகுதிகள், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com