கோப்புப்படம்
கோப்புப்படம்

மெட்ரிக் பள்ளிகளிலும் இடஒதுக்கீடு கட்டாயம்: பள்ளிக்கல்வித் துறை

தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 
Published on

சென்னை: தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு பின்பற்ற வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

பொதுப்பிரிவில் 31%, ST 1%, SC 18%, MBC 20%, BCM 3.5%, BC 26.5% இடஒதுக்கீட்டை பின்பற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது, முதலில் பொதுப் பிரிவினருக்கான 31% இட ஒதுக்கீட்டுக்கு பட்டியல் தயாரிக்கப்பட வேண்டும். மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே பொதுப்பிரிவினருக்கு 31% இடஒதுக்கீட்டுக்கான பட்டியல் தயாரிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

அனைத்துப்பரிவினருக்கும் ஏற்ற வகையில் பாகுபாடின்றி பட்டியல் தயாரிக்க பள்ளிக்கல்வித் துறை உத்திரவிட்டுள்ளது. இடஒதுக்கீடு அடிப்படையில் சேர்க்கை நடக்கிறதா என்பதை முதன்மைக்கல்வி அலுவலர்கள் உறுதிப்படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com