தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 151 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. புதிதாக 2 பேர் உயிரிழந்தனர்.
தமிழகத்தில் நேற்று 158 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பாதிக்கப்பட்டவகளின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.
அதில், இன்று புதிதாக 151 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,51,322-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு 38,019 ஆக அதிகரித்துள்ளது.
இன்று ஒரு நாளில் மட்டும் 418 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,11,158-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தமாக 6,47,95497 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் புதிதாக பாதிப்பு கண்டறியப்படவில்லை. அதிகபட்சமாக சென்னையில் 51 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 7,50,518 ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எங்களுடன் பேச ஈரானில் தலைவர்கள்தான் இல்லை: டிரம்ப்

இந்த முறை சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்: அஜிங்க்யா ரஹானே
சமூக ஊடகங்களில் அரசியல் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அவசியம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

தென்காசியைத் தொடர்ந்து நெல்லை மாவட்டத்திற்கும் ஏப்ரல் 1 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

