புதுச்சேரியில் மார்ச் 14 முதல் மழலையர் பள்ளிகள் திறப்பு
புதுச்சேரியில் மார்ச் 14 முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


புதுச்சேரியில் மார்ச் 14 முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
புதுச்சேரி, காரைக்காலில் கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு வரை ஜனவரி 10- ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. 10- ஆம் வகுப்பு முதல் கல்லுாரிகள் வரை ஜனவரி 18- ஆம் தேதியிலிருந்து மூடப்பட்டன. இருப்பினும், இணைதளம் வழியே வகுப்புகள் நடத்தப்பட்டன.
இதனிடையே, கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதால், அனைத்து பள்ளிகள், கல்லுாரிகள் (பிப். 4) முதல் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் மழலையர் பள்ளிகள் மட்டும் திறக்க அனுமதியளிக்கவில்லை.
இந்த நிலையில் புதுச்சேரியில் மார்ச் 14 முதல் மழலையர் பள்ளிகள்(எல்.கே.ஜி., யு.கே.ஜி.) திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...