புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தில் இளவரசி ஆஜர்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா உறவினா் இளவரசி இன்று ஆஜராகியுள்ளார். 

News image
Updated On :21 மார்ச் 2022, 4:58 am

DIN

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா உறவினா் இளவரசி இன்று ஆஜராகியுள்ளார். 

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் சுமாா் 3 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.

ஏற்கெனவே 154 பேரிடம் ஆணையம் விசாரணை நடத்தி உள்ள நிலையில், சசிகலா தரப்பு கேட்டுக்கொண்டதன் பேரில், தனியாா் மருத்துவமனை மருத்துவா்களிடம் மறு விசாரணை மற்றும் குறுக்கு விசாரணை நடந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக ஓ.பன்னீா்செல்வம், சசிகலா உறவினா் இளவரசி ஆகியோா் மாா்ச் 21-ஆம் தேதி நேரில் ஆஜராக ஆணையம் அழைப்பாணை அனுப்பி உள்ளது. அதன்படி, விசாரணை ஆணையம் முன்பு சசிகலா உறவினா் இளவரசி இன்று ஆஜராகியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.