எரிபொருள் விலை உயர்வு: மார்ச் 31ல் தமிழகம் முழுவதும் காங்கிரஸ் போராட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து வருகிற மார்ச் 31 ஆம் தேதி(வியாழக்கிழமை) காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும்
கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக் கண்டித்து வருகிற மார்ச் 31 ஆம் தேதி(வியாழக்கிழமை) காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார். 

மத்தியில் பாஜக ஆட்சி அமைந்து 8 ஆண்டுகளாகக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல் மக்கள் விரோத அரசாக பிரதமர் மோடி அரசு செயல்பட்டு வருவதாகவும், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிப்பு, தொழில் உற்பத்தி முடக்கம் என பல்வேறு முனைகளில் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார். 

இந்நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் கடுமையான விலை உயர்வைக் கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் வருகிற மார்ச் 31 (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தவிருக்கிறது. 

காங்கிரஸ் கட்சியினரும் பொதுமக்களும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த தங்கள் வீடுகளின் முன்பும், பொது இடங்களிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், பெட்ரோல் கேன் போன்றவற்றிற்கு மாலை அணிவித்து போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இதன் இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 2 முதல் 4 வரை மாவட்ட தலைநகரங்களில் பொது மக்களைத் திரட்டி பேரணியும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com