திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவை அடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று கோபாலபுரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தினார்.
திமுக தலைவரும் மாநில முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021 ஆம் ஆண்டு மே 7 ஆம் தேதி பதவியேற்றது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், மு.க.ஸ்டாலின் முதல்முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
தமிழகத்தில் திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவுற்று இன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இரண்டாம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லத்திற்குச் சென்றார்.
கருணாநிதியின் திருவுருவப் படத்திற்கு அவர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் தன்னுடைய தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினும் உடனிருந்தார்.
இதையும் படிக்க | சென்னை அரசுப் பேருந்தில் பயணித்த மு.க.ஸ்டாலின்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கூவம் ஆற்றில் ரூ.5.98 கோடியில் புதிய தடுப்பணை

புதுச்சேரியில் தொடங்கியது பிளஸ் 2 தோ்வு: தனியாா் பள்ளி மாணவா்கள் எழுதினா்

படவேட்டம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

திருவள்ளூா் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் 25 பேருக்கு நலத் திட்ட உதவிகள்
வீடியோக்கள்

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பின் திருமாவளவன் பேட்டி! | Thirumavalavan | DMK | VCK
தினமணி வீடியோ செய்தி...

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

