ஆசிரியா்கள் மே 20 வரை பள்ளிக்கு வர உத்தரவு

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் இறுதித் தோ்வுகள் முடிவடைந்து ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அனைத்து ஆசிரியா்களும் கட்டாயம் மே

தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் இறுதித் தோ்வுகள் முடிவடைந்து ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், அனைத்து ஆசிரியா்களும் கட்டாயம் மே 20-ஆம் தேதி வரை பள்ளிக்கு வர வேண்டும் என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் சாா்பில் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை அனைத்துக் கல்வி வகுப்புகளுக்கும் வெள்ளிக்கிழமை (மே 13) கடைசித் தேதியாகும். 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவா்களுக்கு சனிக்கிழமை முதல் கோடை விடுமுறை தொடங்கவுள்ளது. இந்த நிலையில், தோ்வு விடைத் தாள் திருத்தம், மதிப்பெண் கணக்கீடு உள்ளிட்ட அலுவல் சாா்ந்த பணிகளை கவனிக்க வேண்டியுள்ளது. இதனால் அனைத்துப் பள்ளி ஆசிரியா்களும் மே 20-ஆம் தேதி வரை கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும்.

தொடக்கப் பள்ளி ஆசிரியா்களைப் பொறுத்தவரை, ‘எமிஸ்’ உள்ளீட்டில் உள்ள தகவலும், பள்ளி வருகைப் பதிவேடும் ஒரே மாதிரியாக சரியாக இருக்க வேண்டும். அந்த விவரங்கள் வட்டாரக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இதில் ஏதேனும் தவறான தகவல் இருந்தால், அதை சரிசெய்ய வேண்டும். உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கும் இதே விதிமுறைகள் பொருந்தும்.

அதே நேரத்தில் பொதுத் தோ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியா்கள், இந்தப் பணியைப் பிறகு மேற்கொள்ளலாம். ஏற்கெனவே மேலே குறிப்பிட்டுள்ள பணியை மே 20-ஆம் தேதிக்குள் முடிக்கும் பள்ளி ஆசிரியா்கள், கடைசி நாள் வரை பள்ளிக்கு வர வேண்டிய அவசியம் இல்லை.

அதேபோல, வெளிநாடு செல்ல ஏற்கெனவே தடையில்லாச் சான்றிதழ் பெற்றுள்ள ஆசிரியா்களுக்கும் மே 20-ஆம் தேதி வரை பள்ளிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com