பேரறிவாளன் விடுதலை: என்ன சொல்கிறார் முன்னாள் சிபிஐ அதிகாரி தியாகராஜன்?

ஏஜி பேரறிவாளனின் வாக்குமூலத்தை அப்படியே எழுதாமல் தவறிழைத்துவிட்ட குற்ற உணர்ச்சியோடு 31 ஆண்டுகாலம் வாழ்ந்து கொண்டிருந்தவர் சிபிஐயின் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் வி. தியாகராஜன்.
பேரறிவாளன் விடுதலை: என்ன சொல்கிறார் முன்னாள் சிபிஐ அதிகாரி தியாகராஜன்?
பேரறிவாளன் விடுதலை: என்ன சொல்கிறார் முன்னாள் சிபிஐ அதிகாரி தியாகராஜன்?


சென்னை: ஏஜி பேரறிவாளனின் வாக்குமூலத்தை அப்படியே எழுதாமல் தவறிழைத்துவிட்ட குற்ற உணர்ச்சியோடு 31 ஆண்டுகாலம் வாழ்ந்து கொண்டிருந்தவர் சிபிஐயின் முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் வி. தியாகராஜன்.

அந்த வாக்குமூலத்தை அவர் சொன்னது சொன்னபடி எழுதியிருந்தால், மிக விரைவாகவே பேரறிவாளன் சிறையிலிருந்து வெளியேறியிருக்கக் கூடும். 

இது குறித்து நீங்கள்  எப்போதும் என்ன நினைப்பீர்கள் என்ற கேள்விக்கு, எப்போதும் ஒரு குறை இருந்துகொண்டே இருந்தது, அதுவும் என்னால்தான் நடந்தது, அதற்கு நான்தான் காரணம், எப்போது நான் அதை வெளியே வந்து சொன்னேனோ அப்போதுதான் அதற்கு விமோசனம் கிடைத்தது என்கிறார். 

கடந்த 2013ஆம் ஆண்டு நேர்காணலிலும் பிறகு நீதிமன்றத்திலும் தியாகராஜன் கூறியிருந்தது இதுதான். அதாவது, பேரறிவாளன் அளித்த வாக்குமூலத்தில், இரண்டு பேட்டரிகளை மட்டும்தான் வாங்கிக் கொடுத்தேன். ஆனால், அவை எதற்காக வாங்கப்பட்டது என்பது எனக்குத் தெரியாது (அந்த பேட்டரிகள்தான் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொல்ல வெடிக்கப்பட்ட வெடிகுண்டில் பயன்படுத்தப்பட்டது) என்று கூறியிருந்தார். எனக்குத் தெரியாது என்ற வாக்குமூலத்தை தியாகராஜன் பதிவு செய்யாமல் விட்டுவிட்டார்.

இந்த வாக்குமூலத்தில் அவர் விட்டுவிட்டு ஒரே ஒரு வாக்கியம்தான் மிகவும் முக்கியம். ஏனென்றால், அந்த வாக்கியம் மூலம், பிரதமரை கொலை செய்யும் சதி திட்டம் பற்றி பேரறிவாளனுக்கு எதுவும் தெரியாது என்பது தெரிய வருகிறது. 

இது குறித்து தியாகராஜன் கூறுவது என்னவென்றால், ஒரு வேளை, பேரறிவாளனுக்கு கொலை சதி திட்டம் குறித்து தெரியாது என்றால், பிறகு எப்படி அவரை கொலைக் குற்றவாளிகளுடன் சேர்ப்பது? என்கிறார்.

1991ஆம் ஆண்டில் நடைபெற்ற ராஜீவ் காந்தி கொலைக் குற்றவாளிகளின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த தியாகராஜன், அந்த வேளையில், தானும் ஒரு விசாரணை அமைப்பின் அங்கம் என்று உணர்ந்திருந்தேன். விசாரணையின்போது, தனிநபர் மற்றும் விசாரணை அமைப்பின் சுமைகள் என இரண்டையும் தாங்க வேண்டிய நிலையில், தனதுத வறுக்கு அந்த அமைப்பும்தான் பொறுப்பு என்கிறார்.

ஒரு குழுவாக விசாரணை நடத்தும் போது சில தவறுகள் நிகழக்கூடும். விசாரணை அமைப்பானது சாட்சியங்களை திரட்டும், மதிப்பிடும், சாட்சிகளை மறுமதிப்பீடு செய்யும், மேற்கொண்டு சில சாட்சிகள் வரும்போது, மீண்டும் மதிப்பீடு செய்த சாட்சியங்களை மறுமதிப்பீடும் செய்யும். அதுபோலத்தான் இந்த விசாரணையின்போது ஒரு தவறிழைக்கப்பட்டுவிட்டது. ஒரு விசாரணை என்றால், அதில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் ஒரு சிறிய தவறை இழைத்துவிடலாம், அது நீதிக்கே எதிரானதாக மாறிவிடலாம், இல்லையென்றால் அதை முடிக்க முடியாது என்கிறார்.

பேரறிவாளனை விடுவிப்பதில் தான் வெளிப்படுத்திய தகவல்களை உச்ச நீதிமன்றம் எங்குமே குறிப்பிடுவதை தவிர்த்துவிட்டது. வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. இது 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த ஒருவரை விடுதலை செய்தது மட்டும் ஆகாது, அதற்கும் மேலாக, ஒரு ஆளுநருக்கு உள்ள அதிகாரம் மற்றும் மாநில அரசின் அதிகாரங்களை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கும் தீர்ப்பு என்று குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com