ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

ஆன்மிகத்திற்கு எதிரானதல்ல திமுக; மக்களுக்கானது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை பல மடங்கு உயர்த்திவிட்டு தற்போது கந்துடைப்புக்காக சிறிதளவு குறைத்துள்ளது: மு.க.ஸ்டாலின் 

News image
Updated On :24 மே 2022, 12:04 pm

DIN

தமிழகத்தில் திமுக ஆட்சி ஆன்மிகத்திற்கு எதிரானது அல்ல என்று சேலத்தில் நடைபெற்ற ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 

அப்போது ஆன்மிகத்திற்கு எதிராக எழுந்த சர்ச்சை குறித்து பேசிய அவர், திமுக ஆட்சி ஒருபோதும் ஆன்மிகத்திற்கு எதிரான கட்சியாக இருந்ததில்லை. இருக்கப்போவதுமில்லை.

ஆன்மிகத்தின் பெயரால் திமுக ஆட்சி மீது சிலர் குறை சொல்லத் தொடங்கியுள்ளனர். குறை சொல்வதற்கு ஏதும் இல்லாததால், ஆன்மிகத்தின் பெயரால் ஆட்சி மீது அவதூறு சொல்கிறார்கள்

திராவிட மாடல் எதையும் இடிக்காது, உருவாக்கும். யாரையும் புறக்கணிக்காது, அரவணைக்கும்.

திமுக கொடுத்த வாக்குகளை மக்கள் மறந்தாலும், நான் மறக்கமாட்டேன். தமிழக மக்களுக்காக என் சக்தியையும் மீறி உழைப்பேன் என மக்கள் மத்தியில் உறுதி அளிக்கிறேன்.

பெட்ரோல், டீசல் விலையை பல மடங்கு உயர்த்திவிட்டு தற்போது கந்துடைப்புக்காக சிறிதளவு குறைத்துள்ளனர். 

இல்லாததை கட்டவிழ்த்துவிட்டு பார்க்கும் பலரால் இருப்பதை கண் திறந்து பார்க்க முடியவில்லை.

எத்தனை விஷத்தன்மை வாய்ந்த பிரசாரங்களை செய்தாலும் திமுகவை ஒருபோதும் மக்கள் மனதிலிருந்து வீழ்த்த முடியாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.