மாநில வரியை மத்திய அரசு சுரண்டிவிட்டது: மு.க.ஸ்டாலின் உரை

தமிழகத்தில் கடந்த ஓராண்டு காலம் செய்த ஆட்சியின் மூலம் மிகப்பெரிய நம்பிக்கை பிறந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஆத்தூரில் நடைபெறும் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
ஆத்தூரில் நடைபெறும் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் கடந்த ஓராண்டு காலம் செய்த ஆட்சியின் மூலம் மிகப்பெரிய நம்பிக்கை பிறந்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். 

அப்போது பேசிய அவர், சேலத்தை உள்ளடக்கிய மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் சுறுசுறுப்பாக பணியாற்றுகின்றனர். 

சேலம் மாவட்டம் சாதாரண மாவட்டம் அல்ல, வீரபாண்டியார் மாவட்டம். இருளை அகற்றி ஒளியூட்டும் சின்னமாக உதயசூரியன் விளங்குகிறது. 

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது தொகுதிக்கு எதையும் செய்யவில்லை.

திராவிட மாடல் யாரையும் பிரிக்காது, ஒன்றுசேர்க்கும் ஆட்சியாகவே திராவிட மாடல் ஆட்சி இருக்கும். திமுக ஒரு கட்சியின் அரசு அல்ல. ஒரு இனத்தின் அரசு என்பதை உணர வேண்டும்.

திமுக ஆட்சி ஒருபோதும் ஆன்மீகத்திற்கு எதிரான கட்சியாக இருந்ததில்லை என்றும், இருக்கப்போவதுமில்லை என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

ஆன்மிகத்தின் பெயரால் திமுக ஆட்சி மீது சிலர் குறை சொல்லத் தொடங்கியுள்ளனர். 

குறை சொல்வதற்கு ஏதும் இல்லாததால், ஆன்மீகத்தின் பெயரால் ஆட்சி மீது அவதூறு சொல்கிறார்கள்

ஆட்சி என்பது அனைவருக்கும் பொதுவானது. இந்து சமய அறநிலையத் துறையையும் உள்ளடக்கியதுதான் திமுக அரசு என்பதை மறந்துவிட வேண்டாம். 

மக்களுக்கு சேவை செய்யவே நேரம் போதவில்லை என்பதால் தேவையற்ற விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை. விருப்பமும் இல்லை.

எதிர்க்கட்சி தலைவர் நாள்தோறும் அறிக்கை விடுவதில் தவறில்லை. ஆட்சியில் இருந்தபோது என்ன செய்தார்.

சேலத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த ஜவுளிப்பூங்கா, கொலுசு உற்பத்தி மையம், ஐடி பூங்கா அமைக்கப்படும் 

சேலம் மாவட்ட்டத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்திற்கு என்ன செய்துவிட்டார் என்று கேள்வி எழுப்பினார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com