காங்கிரஸ் கொள்கையை கண்டு அஞ்சுகிறார்கள்: ப.சிதம்பரம்

காங்கிரஸ் கொள்கையை கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். 
காங்கிரஸ் கொள்கையை கண்டு அஞ்சுகிறார்கள்: ப.சிதம்பரம்

காங்கிரஸ் கொள்கையை கண்டு அவர்கள் அஞ்சுகிறார்கள் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ப.சிதம்பரம் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். சென்னை தலைமைச் செயலத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரியான சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசனிடம் ப.சிதம்பரம் வேட்புமனு தாக்கல் செய்தார்.  மேலும வேட்புமனுத் தாக்கலின்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

திமுக 3 இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்த நிலையில் ஒரு இடத்தை கூட்டணி கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. வேட்புமனு தாக்கல் செய்த பிறகு ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மாநிலங்களவைத் தேர்தலில் ஆதரவு தருகிற திமுக, முதல்வர் ஸ்டாலின், தோழமைக் கட்சிகளுக்கும் நன்றி. வேட்மனு தாக்கல் செய்ததை கட்சி தலைவர் சோனியா காந்தியிடம் கூறினேன். அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளை அழுத்தமாக சொல்லி வருபவன் நான். அவர்கள் என்னைப் பார்த்து பயப்படவில்லை. காங்கிரஸ் கொள்கையை கண்டு அஞ்சுகிறார்கள். பிரமர் பங்கேற்ற கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியது சரிதான். அரசியல் சாசனத்தில் ஒன்றியம் என்ற வார்த்தையே பயன்படுத்தப்படுகிறது. புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை பற்றி எல்லாம் புதிதாக கருத்து சொல்ல ஒன்றுமில்லை. இவ்வறு அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com