தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மட்டுமே கரோனா

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கரோனா தொற்று பதிவாகியுள்ளது. எஞ்சிய 32 மாவட்டங்களில் கரோனா தொற்று பதிவாகவில்லை என சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மட்டுமே கரோனா

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கரோனா தொற்று பதிவாகியுள்ளது. எஞ்சிய 32 மாவட்டங்களில் கரோனா தொற்று பதிவாகவில்லை என சுகாதாரத் துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 98 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 49 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.   

கடந்த சில நாள்களாகவே தமிழகத்தில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கடந்த மாதத்தை விட குறைந்தே காணப்படுகிறது. எனினும் நேற்றைய பாதிப்பை விட இன்று (மே 31) சற்று அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. 

 அதில், இன்று புதிதாக 98 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 34,55,474-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் ஒரு உயிரிழப்பு கூட பதிவாகவில்லை. இதனால் மொத்த உயிரிழப்பு 38,025 ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் மட்டும் 49 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

தமிழகத்தில் தற்போது 542 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  சென்னையில் 44 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 7,52,533-ஆக அதிகரித்துள்ளது. 

6 மாவட்டங்களில் கரோனா

தமிழகத்தில் தற்போது ஆறு மாவட்டங்களில் மட்டுமே கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது.  செங்கல்பட்டு (44), சென்னை (46), கோவை (2), காஞ்சிபுரம் (1), திருவள்ளூர் (2), வேலூர் (1) ஆகிய மாவட்டங்களில் கரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com