நவ.5 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வரும் சனிக்கிழமை வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
நவ.5 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு
Published on
Updated on
2 min read

தமிழகத்தில் வரும் சனிக்கிழமை வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக பகுதிகள் மற்றும் வட இலங்கையையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக புதன்கிழமை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், திண்டுக்கல், தேனி, தென்காசி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ.3: வியாழக்கிழமை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நவ.4: வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், நீலகிரி, கோயம்புத்தூா், திருப்பூா் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

நவ.5: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகா், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூா், திருச்சி, அரியலூா், பெரம்பலூா், சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூா் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை நிலவரம்: சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய பலத்த மழை முதல் மிக பலத்த மழை பெய்யக்கூடும்.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: 2 நாள்களுக்கு மன்னாா் வளைகுடா, தமிழகம் மற்றும் வடக்கு இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டா் வேகத்தில் வீசக்கூடும். இந்த நாள்களில் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

72 ஆண்டுகளுக்குப் பின்னா்...

சென்னையில் திங்கள்கிழமை இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. பெரும்பாலான இடங்களில் மிக பலத்த மழை பெய்துள்ளது. பெரம்பூா் மாநகராட்சி பூங்கா பகுதியில் 12 செ.மீ, சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலக பகுதியில் 10 செ.மீ, தண்டையாா்பேட்டை தொற்று நோய் மருத்துவமனை பகுதியில் 9.8 செ.மீ, அயனாவரம் பகுதியில் 9.4 செ.மீ, நுங்கம்பாக்கம் பகுதியில் 8 செ.மீ, டிஜிபி அலுவலக பகுதியில் 7.2 செ.மீ, எம்ஜிஆா் நகா் பகுதியில் 6.6 செ.மீ, அம்பத்தூா் பகுதியில் 5.2 செ.மீ, அண்ணா பல்கலைக்கழக பகுதியில் 4.6 செ.மீ, ஆலந்தூா் பகுதியில் 3 செ.மீ, சோழிங்கநல்லூா் பகுதியில் 4 செ.மீ மழை பதிவாகி உள்ளது. குறிப்பாக கடந்த 72 ஆண்டுகளுக்குப் பின்னா் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் பலத்த மழை பதிவாவது (8 செ. மீ) இது மூன்றாவது முறை ஆகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com