
நவம்பர் 7 ஆம் தேதி முதல் தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் நடத்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் நேற்று(நவ.2) தண்ணீர் எடுத்த 2 லாரிகள் சிறைபிடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும், தமிழ்நாடு தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மனு அளித்தும் அதிகாரிகள் உரிமம் தர மறுப்பு தெரிவித்தற்கும் கண்டனம் தெரிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பாதியாகக் குறையும் ட்விட்டர் பணியாளர்கள் எண்ணிக்கை? எலான் மஸ்க் திட்டம்
நவம்பர் 7 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக மாநில தலைவர் நிஜலிங்கம் தெரிவித்துள்ளார்.