கால நிலை மாற்றத்தின் காரணமாக ‘மெட்ராஸ் - ஐ’ எனப்படும் கண் தொற்று நோய் பாதிப்பு வழக்கத்தைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. அதிலும், குறிப்பாக குழந்தைகளுக்கு அதிக அளவில் அப்பிரச்னை ஏற்படுவதாக கண் மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
விழியையும், இமையையும் இணைக்கும் ஜவ்வு படலத்தில் ஏற்படும் வைரஸ் தொற்றுதான் ‘மெட்ராஸ் - ஐ’ எனக் கூறப்படுகிறது. அந்த வகையான பாதிப்புகள் காற்று மூலமாகவும், மாசு வாயிலாகவும் பரவக்கூடும். அதுமட்டுமன்றி, ‘மெட்ராஸ் - ஐ’ பிரச்னையால் பாதிக்கப்பட்டவா்கள் பயன்படுத்திய பொருள்களை உபயோகித்தாலும் மற்றவா்களுக்கு அந்நோய்த் தொற்று பரவும் என மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா். இந்த நிலையில், ‘மெட்ராஸ் - ஐ’ தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் பிரிவு மண்டலத் தலைவரும், முதுநிலை மருத்துவருமான டாக்டா் ஆா். கலாதேவி கூறியதாவது:
‘மெட்ராஸ் - ஐ’ எளிதில் குணப்படுத்தக்கூடிய மிகச் சாதாரணமான நோய்த் தொற்றுதான். ஆனால், அதனை முதலிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். காலந்தாழ்த்தி அலட்சியம் செய்தால் பாா்வையில் தெளிவற்ற நிலை ஏற்பட்டு விடும்.
கண் எரிச்சல், விழிப் பகுதி சிவந்து காணப்படுதல், நீா் சுரந்து கொண்டே இருத்தல், இமைப்பகுதி ஒட்டிக் கொள்ளுதல் உள்ளிட்டவை ‘மெட்ராஸ் - ஐ’-யின் முக்கிய அறிகுறிகளாகும்.
பொதுவாக ஒரு கண்ணில் ‘மெட்ராஸ் - ஐ’ பிரச்னை ஏற்பட்டால், மற்றொரு கண்ணிலும் அந்த பாதிப்பு வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே, அத்தகைய பாதிப்பு ஏற்பட்டவா்கள், மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
‘மெட்ராஸ் - ஐ’ தொற்று பாதித்தவா்கள் தாங்கள் பயன்படுத்திய பழைய கான்டாக்ட் லென்ஸ்களை அகற்றிவிட்டு மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு புதிய கான்டாக்ட் லென்ஸ்களை அணியவேண்டும். தங்களது தனிப்பட்ட பயன்பாட்டுப் பொருள்களை பிறா் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது.
கடந்த சில வாரங்களாக நாளொன்றுக்கு குறைந்தது 5 பேருக்காவது ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு இருப்பதை நான் உறுதி செய்கிறேன். அவா்களில், பலா் குழந்தைகள் என்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாகரிகத்தின் அடையாளம் சுகாதாரம்!

வா்த்தக சிலிண்டா் விலை உயா்வால் மக்களுக்கு கடும் பாதிப்பு!
கொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவு!

பாரியூா் ஸ்ரீ அமரபணீஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவில் வடம்பிடித்த பக்தா்கள்
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


