சீர்காழி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு!

சீர்காழி அருகே மணிகிராமத்தில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மெய்யநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
சீர்காழி: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் அமைச்சர்கள் ஆய்வு!

சீர்காழி அருகே மணிகிராமத்தில் வெள்ள நீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, மெய்யநாதன் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நேற்று முன்தினம் பெய்த 44 சென்டிமீட்டர் அதீத கனமழை காரணமாக சீர்காழி  நகர் பகுதி மட்டுமின்றி சுற்றியுள்ள கிராமங்களும் முழுவதுமாக தண்ணீர் சூழ்ந்து பாதிக்கப்பட்டது. தண்ணீரில் மூழ்கி தவித்த குடியிருப்பு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு அரசின் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளையும் மாவட்ட நிர்வாகம் செய்யப்பட்டுள்ளது. 36 தற்காலிக நிவாரண முகாம்களில் 17 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மழைநீர் சூழ்ந்து பாதிக்கப்பட்ட மணி கிராமம் பகுதியில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். 
மேலும், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர். அப்பொழுது இரவு நேரத்தில்  வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் வீட்டில் இருந்த ஆவணங்கள், குழந்தைகளின் பள்ளிப் புத்தகங்கள் என அனைத்து உடைமைகளையும் இழந்து தவிப்பதாக தெரிவித்தனர். 

இதனையடுத்து அனைத்து மாணவர்களுக்கும் புதிய புத்தகங்கள் வழங்கவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அனைத்து ஆவணங்களையும் வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு அமைச்சர்கள் உத்தரவிட்டனர்.

அமைச்சரின் ஆய்வின்போது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர், நிவேதா எம் முருகன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com