அமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வசூல் சரிவு! சிவப்பு எச்சரிக்கையா?டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!மேற்கு ஆசியா பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை சரிவுடன் நிறைவு!தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!

திருச்சி - இலங்கை இடையே டிச. 8 முதல் புதிய விமான சேவை தொடக்கம்

குளிர்கால அட்டவணைக்கு பிறகு திருச்சி - இலங்கை இடையே டிசம்பர் 8ஆம் தேதி முதல் புதிய விமான சேவை தொடங்கப்படவுள்ளது.

Published On :1 பிப்ரவரி 2024, 4:21 pm IST

திருச்சி: குளிர்கால அட்டவணைக்கு பிறகு திருச்சி - இலங்கை இடையே டிசம்பர் 8ஆம் தேதி முதல் புதிய விமான சேவை தொடங்கப்படவுள்ளது.

திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, துபை, சார்ஜா, குவைத் உள்ளிட்ட நாடுகளுக்கு சர்வதேச விமான போக்குவரத்துகள் நடைபெற்று வருகின்றன. 

திருச்சி - இலங்கை இடையே தினசரி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. என்றாலும் திருச்சியில் இருந்து இலங்கை வழியாக துபைக்கு, சென்று வரும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இச்சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தினசரி ஏராளமான பயணிகள் துபைக்கு சென்று வருகின்றனர். ஆனால் இயக்கப்படும் இரு விமானங்களில் போதிய அளவு இருக்கைகள் கிடைப்பதில்லை. எனவே திருச்சியில் இருந்து, சென்னை வழியாகவோ அல்லது இலங்கை சென்று அங்கிருந்து மாற்று விமானங்கள் மூலமாகவோ துபைக்கு சென்று வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு திருச்சி - இலங்கை இடையே ஃபிட்ஸ் ஏர் என்ற இந்த கூடுதல் விமான சேவை அறிமுகம் செய்யப்படுகிறது.

துபை செல்லும் பயணிகள் திருச்சியில் இருந்து இலங்கை சென்று அங்கிருந்து மாற்று விமானங்கள் மூலம்  பயணிக்கலாம். அதேபோல துபையில் இருந்து திருச்சி வரும் பயணிகளும் இதே வழியில் திருச்சி வந்து சேரலாம்.

டிசம்பர் எட்டாம் தேதி முதல் தொடங்கப்பட உள்ள இந்த புதிய விமான சேவை, வாரத்தில் வியாழன், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படவிருக்கிறது.

வியாழக்கிழமை காலை 10:25 மணிக்கு இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து புறப்படும் இந்த விமானம் 11:25க்கு திருச்சியை வந்தடைகிறது. மீண்டும் இங்கிருந்து 12:25க்கு புறப்பட்டு 1:25க்கு இலங்கையை சென்றடைகிறது. 

சனிக்கிழமை பகல் 12:45க்கு இலங்கையில் இருந்து புறப்பட்டு 1:45 க்கு திருச்சி வந்தடைந்து மீண்டும் 2:45 க்கு இங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் 3:45க்கு கொழும்பை அடைகிறது. 

ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 10 மணிக்கு கொழும்புவிலிருந்து புறப்படும் இந்த விமானம் 11 மணிக்கு திருச்சியை வந்து அடைந்து, மீண்டும் 11:45க்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு 12:45க்கு  கொழும்புவை அடைகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.