கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் - மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் மறுப்பு

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 2 மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 
கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் - மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் மறுப்பு

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட 2 மருத்துவர்களுக்கு முன்ஜாமீன் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

சென்னை வியாசா்பாடியைச் சோ்ந்த கால்பந்தாட்ட வீராங்கனையும், கல்லூரி மாணவியுமான பிரியா உயிரிழந்த நிலையில், அவருக்கு பெரியாா் நகா் புகா் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளித்த அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவா் கே.சோமசுந்தா் மற்றும் எலும்பியல் மருத்துவா் ஏ.பால் ராம் சங்கா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

மாணவியின் தந்தை ரவிக்குமாா் அளித்த புகாரின்படி பெரவள்ளூா் போலீஸாா் கவனக்குறைவால் மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதற்கிடையே, பணியிடை நீக்க உத்தரவு நகலை வழங்க சுகாதாரத் துறை அதிகாரிகள், அவா்களது இல்லத்துக்குச் சென்ற போது, இரு மருத்துவா்களும் தலைமறைவானது தெரியவந்தது.

இந்த நிலையில் மருத்துவர்கள் கே.சோமசுந்தா், ஏ.பால் ராம் சங்கா் ஆகியோா் சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்திருந்தனர். இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம் மருத்துவர்கள் இருவருக்கும் முன்ஜாமீன் அளிக்க மறுத்துவிட்டது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com