பொங்கல் வேட்டி, சேலை! அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

பொங்கல் பண்டிகைக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் சனிக்கிழமை இன்று (நவ.19) ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)
முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப் படம்)

பொங்கல் பண்டிகைக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் சனிக்கிழமை இன்று (நவ.19) ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, அதிகாரிகள், செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். 

பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு பரிசுடன் விலையில்லா வேட்டி, சேலை வழங்கப்படுகிறது. 

அந்தவகையில் இந்த ஆண்டு பொதுமக்களுக்கு விலையில்லா வேட்டி, சேலை வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவசமாக வழங்க 1.26 கோடி வேட்டி, 99.56 லட்சம் சேலைகள் விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்ய உற்பத்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகையின்போது வழங்குவதற்கான வேட்டி, சேலை திட்டத்துக்கு முதல் தவணைத் தொகையாக ரூ.243.96 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com