மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

கொளத்துப்பாளையம் பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்
Published on
Updated on
1 min read

ஈரோடு: கொளத்துப்பாளையம் பகுதியில் உள்ள மகா மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ரயில்வே நிலையம் (ஆர்.எஸ்) அடுத்த கொளத்துப்பாளையம் பகுதியில் பிரசித்தி பெற்ற சன்னதி விநாயகர், கன்னிமூல கணபதி, மகா மாரியம்மன் கோயில் உள்ளது. 

இக்கோயில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதில், மகா மாரியம்மன் கருவறை அருகே வசந்த மண்டபம், கோபுரம், கன்னிமூல கணபதிக்கு கோயில் அமைக்கப்பட்டது. கும்பாபிஷேகம் விழா கடந்த 17ம் தேதி இரவு கிராம சாந்தி பூஜையுடன் துவங்கியது. 

கடந்த 18ம் தேதி காலை கணபதி ஹோமம், புனித நீர் எடுத்து வருவதல், மாலை 5 மணிக்கு முளைப்பாலிகை போடுதல், முனியப்பசாமி ஊர்வலம், தொடர்ந்து, விநாயகர் பூஜை, சங்கல்பம், புண்யாகம், கும்பலங்காரம், ரக்ஷாபந்தனம், மகா மாரியம்மன் கும்பரூமாக பரிவார தெய்வங்களுடன் யாகசாலையில் சிறப்பு பூஜை, முதற்கால யாக பூஜை நடந்தது. 

நேற்று(19ம் தேதி) காலை 9 மணிக்கு புண்யாகம், சுதை சிற்பங்கள் கண் திறப்பு கலசம் வைத்து, 2ம் கால யாக பூஜை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு 3ம் கால யாக பூஜையும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான இன்று காலை 5 மணிக்கு 4ம் கால பூஜை நிறைவு பெற்று, கலசங்கள் கோயிலை சுற்றி எடுத்து வரப்பட்டு, கோபுரத்தில் வைக்கப்பட்டு விநாயகர், மகா மாரியம்மன், ஆலய விநாயகர், மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனதி நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. 

இவ்விழாவில், கொளத்துப்பாளையம், பெருந்துறை, வடமுகம் வெள்ளோடு, பிச்சாண்டாம்பாளையம் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டு சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com