கருங்குயில்நாதன்பேட்டை சக்திபுரீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு

கருங்குயில்நாதன்பேட்டை சக்திபுரீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் தருமபுரம் மற்றும் சூரியனார் கோவில் ஆதீனகர்த்தர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.
கருங்குயில்நாதன்பேட்டை சக்திபுரீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு

மயிலாடுதுறை:  தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான கருங்குயில்நாதன்பேட்டை சக்திபுரீஸ்வரர் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் தருமபுரம் மற்றும் சூரியனார் கோவில் ஆதீனகர்த்தர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

மயிலாடுதுறை அருகே கருங்குயில்நாதன்பேட்டை ஸ்ரீஆனந்தவல்லி அம்மை உடனாகிய ஸ்ரீசக்திபுரீஸ்வர சுவாமி கோயிலில் இன்று குடமுழுக்கு நடைபெற்றது. இந்திரன் குயில் வடிவம் கொண்டு இறைவனைப் பூசித்த தலமே கருங்குயில்நாதன் பேட்டை என வழங்கப்படுகிறது. 

தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான இந்த கோயில் 25-வது குரு மகா சந்நிதானம். அருளாட்சி காலத்தில் 1962-ஆம் ஆண்டு குடமுழுக்கு நடத்தப்பட்டது.

60 ஆண்டுகளுக்குப்பின் இக்கோயில்களில் திருப்பணி செய்யப்பட்டு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் 4 கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, இன்று காலை 9 மணியில் இருந்து காலை 10.30 மணிக்குள்ளாக குடமுழுக்கு நடைபெற்றது. 

இதில், சூரியனார் கோவில் ஆதீனம் 28-வது குரு மகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள் மற்றும் ஆயிரக்கணக்கானபொதுமக்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com