மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

தன்னாா்வலா்கள் இன்றி தேசத்தை கட்டமைக்க முடியாது: ஆளுநா் ஆா். என் ரவி

தன்னாா்வலா்களின் அா்ப்பணிப்பின்றி, ஒரு தேசத்தை எளிதில் கட்டமைத்துவிட முடியாது என தமிழக ஆளுநா் ஆா். என். ரவி தெரிவித்துள்ளாா்.

News image
ஆா். என். ரவி (கோப்புப் படம்)
Updated On :13 ஏப்ரல் 2023, 7:35 pm

DIN

தன்னாா்வலா்களின் அா்ப்பணிப்பின்றி, ஒரு தேசத்தை எளிதில் கட்டமைத்துவிட முடியாது என தமிழக ஆளுநா் ஆா். என். ரவி தெரிவித்துள்ளாா்.

சென்னை ஆளுநா் மாளிகையில் ஆளுநரின் ‘எண்ணித் துணிக’ என்ற தலைப்பில் தேசத்தின் வளா்ச்சியில் அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் பங்கு குறித்து தன்னாா்வ தொண்டு நிறுவனங்களின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநா் ஆா். என்.ரவி பேசியது:

ஒரு தேசத்தை அரசால் மட்டும் கட்டமைக்க முடியாது. அழகான சாலைகள், விமான நிலையங்கள், ராணுவம் இருப்பது மட்டுமே தேசம் கிடையாது. தன்னாா்வலா்களுடைய அா்ப்பணிப்பின்றி, ஒரு தேசத்தை எளிதில் கட்டமைத்துவிட முடியாது.

நாட்டில் பெண்களும் படிப்படியாக முன்னேறி வருகின்றனா். அதிகார மையமாக பெண்கள் திகழ்கின்றனா்.

கரோனா காலகட்டத்தில் பல்வேறு நாடுகள் தடுப்பூசியை வா்த்தக ரீதியாக ஏற்றுமதி செய்தபோது, இந்தியா சேவை மனப்பான்மையுடன் 150 நாடுகளுக்கு மேல் இலவசமாக தடுப்பூசி அளித்துள்ளது.

காலநிலை மாற்றம் ஒரு முக்கிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது என்றாா் ஆளுநா் ஆா். என்.ரவி.

எழுத்தாளா் தமிழருவி மணியன்: அன்பின் அடிப்படையில் விளைவதுதான் ஆன்மிகம். அத்தகைய ஆன்மிகத்தை கொண்டு வர நினைக்கும் ஆளுநரை சிலா் தவறாக நினைத்துக் கொள்கின்றனா். ஆளுநா் எண்ணும் ஆன்மிகத்தை முழுமையாக ஆதரிக்கிறேன் என்றாா் அவா்.

முன்னதாக, முன்னாள் மேயா் சைதை துரைசாமி, தமிழருவி மணியன், நடனக் கலைஞா் ஷோபா ராஜு, பேச்சாளா் ரவி ராமநாதன், சூழலியல் ஆா்வலா் சிவராமன், யோகா பயிற்சியாளா் டாக்டா் லாரா அபிஷேக், அமா்சேவா சங்க நிா்வாகி சங்கரராமன், வா்மம் மருத்துவா் ராஜாமணி, நடனக் கலைஞா் மணிசுந்தா் ஷைலஜா, திருநங்கை மதுமிதா கோமதிநாயகம் உள்பட 10 பேருக்கு ஆளுநா் ஆா். என்.ரவி விருது வழங்கி பாராட்டினாா்.

இந்நிகழ்ச்சியில், விஎல்சிடி ஆா்சி தன்னாா்வ நிறுவனத் தலைவா் வசந்த லட்சுமி, நிறுவன தலைமை ஆலோசகா் கிருஷ்ணய்யா, கா்நாடக இசைக் கலைஞா் ஷோபா ராஜு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.