ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும் மற்றும் கர்நாடகத்திடமிருந்து  இழப்பீடு  வசூலிக்க வேண்டும்

News image
கோப்புப்படம்
Updated On :1 பிப்ரவரி 2024, 6:48 pm

DIN

தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகக் கழிவுகள் கலப்பதைத் தடுக்க வேண்டும் மற்றும் கர்நாடகத்திடமிருந்து  இழப்பீடு  வசூலிக்க வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி அணைக்கு வரும் தென்பெண்ணை ஆற்றில் குவியல் குவியலாக நுரைகள் வருகின்றன. தொலைவிலிருந்து பார்த்தால் மேகக் கூட்டமோ என்று  எண்ணும் அளவுக்கு வரலாறு காணாத வகையில் வேதிக்கழிவுகளின் நுரைகள்  தென்பெண்ணை ஆற்றில் கலந்து வருவது பெரும் கவலையளிக்கிறது.

ஆற்றில் செல்லும் நுரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு வேளாண் விளைநிலங்களில் விழுகின்றன. அதனால் பயிர்களுக்கு பாதிப்புகள் ஏற்படும் ஆபத்தும் உள்ளது.  தென்பெண்ணை ஆற்றையொட்டிய குடியிருப்புகள் மீதும், பொதுமக்கள் மீதும் வேதிக்கழிவு நுரைகள் படுகின்றன. இதனால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.

கர்நாடக மாநிலத்தில் நகரக் கழிவுகளும், தொழிற்சாலைக் கழிவுகளும் சட்டவிரோதமாக  தென்பெண்ணை ஆற்றில் கலக்கவிடப்படுவது தான்  இதற்கு காரணம் ஆகும். காவிரியிலும் இத்தகைய  கழிவுகள் கலப்பு பல ஆண்டுகளாகத் தொடர்கிறது. இதை கடந்த காலங்களில் கர்நாடக அரசே ஒப்புக் கொண்டிருக்கிறது.

காவிரியும், தென்பெண்ணையும் கர்நாடகத்தின் கழிவுநீர் சாக்கடையாக மாற்றப்படுவதை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக் கூடாது.  உரிய ஒழுங்குமுறை அமைப்புகளிடம் முறையிட்டு இதை தடுக்க வேண்டும். கழிவுநீர் கலப்பால் பல்வேறு தரப்பினருக்கும் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய கர்நாடகத்திடமிருந்து இழப்பீடு வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தி உள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.