பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பால் கொள்முதல் விலை உயருமா? - அமைச்சர் பதில்!

பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நாசர் தெரிவித்தார். 

News image
Updated On :18 ஏப்ரல் 2023, 9:08 am

DIN

பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நாசர் தெரிவித்தார். 

பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து சட்டப்பேரவையில் அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தன. 

இதற்கு  பதில் அளித்துப் பேசிய பால்வளத்துறை அமைச்சர் நாசர், 'பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பாலை லிட்டருக்கு ரூ. 35 கொடுத்து நாம் வாங்குகிறோம்; வெளிமாநிலத்தவர் அதனைவிட ரூ.5 முதல் 7 அதிகமாகக் கொடுத்து வாங்குகின்றனர். கொள்முதல் விலை உயர்வு குறித்து முதல்வரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். 

அண்மையில் பரவிய நோயால் பல்வேறு மாநிலங்களில் மாடுகள் பாதிக்கப்பட்டன. ஆனால், தமிழக அரசு எடுத்த கடும் நடவடிக்கையால், தமிழகத்தில் கால்நடை நோய் பரவாமல் தடுக்கப்பட்டது.

பால் உற்பத்தியாளர்கள், பால் கூட்டுறவு சங்கங்களுக்கு எவ்வித இடையூறுமின்றி எப்போதும்போல் தொடர்ந்து பால் வழங்கப்பட்டு வருகிறது' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.