ஆளுநர்களின் நடவடிக்கைக்கு எதிராக கூட்டு நடவடிக்கை அவசியம் தேவை என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பதில் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநருக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது போல, எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களிலும் ஆளுநர்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் ஆளுநர்களுக்கு எதிரான கூட்டு நடவடிக்கை தேவை என்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சில தினங்களுக்கு முன்பாக கடிதம் எழுதியிருந்தார்.
இதற்கு பதில் அளித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன், 'ஆளுநர்களின் நடவடிக்கைக்கு எதிராக கூட்டு நடவடிக்கை தேவை.
மாநில அரசின் செயல்பாட்டைக் குறைக்கும் வகையில் ஆளுநர்கள் செயல்படுகின்றனர். கூட்டாட்சி அமைப்பின் அதிகாரத்தில் அவர்கள் அத்துமீறுகின்றனர். ஆளுநர்களுக்கு எதிரான போராட்டத்தில் தமிழ்நாட்டுடன் கேரளம் இணைந்து செயல்படும்' என்றார்.
மேலும் தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைக்கு கேரள முதல்வர் பாராட்டும் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரூ.3.73 கோடியில் மதுராந்தகம் பேருந்து நிலையம் திறப்பு

ஆற்காடு- விழுப்புரம் இடையே நான்கு வழிச்சாலைப் பணி தொடக்கம்

அமீரக நாடுகளில் இந்தியா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்: துரை வைகோ எம்.பி.

அதிமுக தெருமுனை பிரசார கூட்டம்
வீடியோக்கள்

BJP Annamalai interview | விஜய் 234 வேட்பாளர்களை நிறுத்த முடியுமா? | TVK Vijay | DMK | ADMK
தினமணி வீடியோ செய்தி...

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

