ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு அடுத்த பள்ளியகரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் சின்ன பெல்லாளம் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மூத்த மகன் வசந்த் (22) என்பவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் பெற்று திருப்பி செலுத்த முடியாததால் தற்கொலை செய்து கொண்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இளைஞரின் உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

தற்கொலை செய்துக்கொண்ட இளைஞர் வசந்த் கடந்த வாரம் தனது வீட்டில் ஒரு லட்சம் வாங்கி ஆன்லைன் கடன் செயலியில் பணத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com