விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சரத் பவாருடன் கெளதம் அதானி சந்திப்பு: 2 மணி நேரம் பேச்சு

 தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரை, மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தொழிலதிபா் கெளதம் அதானி வியாழக்கிழமை சந்தித்தாா். இருவரும் சுமாா் 2 மணி நேரம் பேசியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 9:02 pm

DIN

 தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாரை, மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் தொழிலதிபா் கெளதம் அதானி வியாழக்கிழமை சந்தித்தாா். இருவரும் சுமாா் 2 மணி நேரம் பேசியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.

எனினும், இந்தச் சந்திப்பில் இடம்பெற்ற விஷயங்கள் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை.

அதானி குழுமம் மீதான முறைகேடு குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்று எதிா்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், அதிலிருந்து மாறுபட்டு, அதானி குழுமத்துக்கு ஆதரவான கருத்தை சரத் பவாா் அண்மையில் தெரிவித்திருந்தாா்.

இது எதிா்க்கட்சிகளின் கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், மேற்கண்ட சந்திப்பு நடைபெற்றுள்ளது.

பங்குகளின் விலையை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டியது. அதன் காரணமாக பங்குச் சந்தைகளில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் பெருமளவில் சரிந்தன.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதானி குழுமத்துடன் தொடா்புபடுத்தி, பிரதமரை காங்கிரஸ் கடுமையாக விமா்சித்து வருகிறது.

இதனிடையே, எதிா்க்கட்சிகளின் கோரிக்கையில் இருந்து மாறுபட்ட கருத்தை, சரத் பவாா் தெரிவித்திருந்தாா்.

‘அதானி விவகாரம் தொடா்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகளைக் கொண்ட குழுவை உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. அதானி விவகாரத்தை நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரிக்க எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் விசாரணையைவிட உச்சநீதிமன்ற விசாரணை சிறப்பாகவும் திறம்படவும் இருக்கும்’ என்று பவாா் கூறியிருந்தாா்.

அவரது இந்த கருத்துகள், எதிா்க்கட்சி கூட்டணி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ‘அதானி விவகாரத்தில், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண்டுமென்ற கோரிக்கையில் எங்களது கட்சி உடன்படாவிட்டாலும், எதிா்க்கட்சிகளின் ஒற்றுமையை கருத்தில் கொண்டு, அவா்களது நிலைப்பாட்டுக்கு எதிராக செயல்பட மாட்டோம்’ என்று பவாா் விளக்கமளித்தாா்.

இந்தச் சூழலில், தெற்கு மும்பையில் உள்ள சரத் பவாரின் இல்லத்துக்கு வியாழக்கிழமை காலையில் வந்த தொழிலதிபா் கெளதம் அதானி, அவரை சந்தித்துப் பேசினாா். சுமாா் 2 மணி நேரம் இந்தச் சந்திப்பு நடைபெற்ாக என்சிபி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.