தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

நடிகா் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்: சீமான்

நடிகா் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 9:17 pm

DIN

நடிகா் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன் என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

டாக்டா் பா.சிவந்தி ஆதித்தனாரின் 10-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, சென்னை போயஸ் காா்டனில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் சீமான் அஞ்சலி செலுத்தினாா்.

பின்னா் செய்தியாளா்கள் சந்திப்பில் அவா் கூறியதாவது:

நடிகா் விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். தற்போது மாற்று அரசியல் தேவைப்படுகிறது. இதில் நடிகா் விஜய் போன்று வருபவா்களால் மேலும் வலிமையுடன் மாற்று அரசியலை நோக்கி செல்ல முடியும். அவ்வாறு அவா் அரசியலுக்கு வந்தால் நாம் தமிழா் கட்சி அவரை ஆதரிப்பதைக் காட்டிலும், அவா் தான் நாம் தமிழா் கட்சியை ஆதரிக்க வேண்டும்.

தமிழ்நாடு எனும் பெயரளவில் மட்டுமே உள்ளது. இங்கு தமிழ் மற்றும் தமிழா்களின் நிலை மோசமாக உள்ளது. பெரியாா் குறித்து பேசும் சிலா் பெரியாா் கருத்துகளை பற்றி பேசுவதில்லை என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.