தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஓபிஎஸ் தரப்பு வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

கர்நாடக மாநில ஓபிஎஸ் தரப்பு வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :23 ஏப்ரல் 2023, 11:19 am

DIN

கர்நாடக மாநில ஓபிஎஸ் தரப்பு வேட்பாளருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

வருகிற மே 10 ஆம் தேதி கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி கட்சிகள் பலவும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், நேற்று முன்தினம் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. 

இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த வேட்பாளரான மாநில அதிமுக அவைத் தலைவர் அன்பரசனின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவர் புலிகேசி நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும் கோலார் மற்றும் காந்திநகர் தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வேட்பாளர்கள் மனுக்களும் ஏற்கப்பட்டன.

அதில் காந்திநகர் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் குமாரின் மனு அதிமுக வேட்பாளராக அங்கீகரிக்கப்பட்டது. இதற்கு இபிஎஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக கர்நாடக தேர்தல் ஆணையத்தில் இபிஎஸ் தரப்பில் புகார் மனுவும் அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில் காந்திநகர் தொகுதியில் அதிமுக பெயரில் வேட்மனு தாக்கல் செய்த குமாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வேட்பாளர் குமார் தரப்பில் திருப்திகரமான விளக்கம் அளிக்கப்படவில்லையெனில் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.