

பசுமை இந்தியா திட்டத்தின் கீழ் தூத்துக்குடி துறைமுகத்தின் செயல்பாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுட்டுரையில் பதிவிட்டுள்ள பிரதமர், சுற்றுச்சூழல் பாதுகாப்பை நோக்கிய உன்னதமான தொலைநோக்குடன் கூடிய முயற்சிக்கு தூத்துக்குடி துறைமுகத்துக்கு வாழ்த்துகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
2022-ல் உலக பூமி நாளையொட்டி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நேற்று உலக பூமி நாள் கொண்டாடப்பட்ட நிலையில், மரங்கள் குறித்த விடியோவை பிரதமர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.