அதிமுக பொதுக்குழு வழக்கு ஜூன் 8-க்கு ஒத்திவைப்பு
அதிமுக பொதுச் செயலாளர் மற்றும் பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை ஜூன் 8 ஆம் தேதிக்கு சென்னை உயர் நிஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு தீர்மானம், பொதுச் செயலாளர் தொடர்பான ஓபிஎஸ் தரப்பினர் தொடர்ந்த வழக்கு 3 ஆவது நாளாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், விசாரணை ஜூன் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும், மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தபின் எடுக்கப்படும் அதிமுகவின் அனைத்து முடிவுகளும் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது என்று நீதிபதிகள் விளக்கமளித்துள்ளனர்.
அதிமுக பொதுச் செயலாளர், பொதுக்குழு தொடர்பான வழக்கில் உறுப்பினர் சேர்க்கை, நீக்கம் ஆகியவை பாதிப்பு ஏற்படாதவாறு, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க ஓபிஎஸ் கோரிக்கை விடுத்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.