சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராணிப்பேட்டை: அரசினர் குழந்தைகள் இல்லத்தில் இருந்து தப்பியோடிய 4 சிறார்களில் 3 பேர் மீட்பு

ராணிப்பேட்டை அரசினர் குழந்தைகள் இல்லத்தில் இருந்து தப்பியோடிய 4 சிறார்களில் 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

News image
Updated On :24 ஏப்ரல் 2023, 9:40 am

DIN

ராணிப்பேட்டை அரசினர் குழந்தைகள் இல்லத்தில் இருந்து தப்பியோடிய 4 சிறார்களில் 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். 

ராணிப்பேட்டை காரை கூட்டுச் சாலையில் அரசினா் குழந்தைகள் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு 5 வயதுக்கு மேற்பட்ட ஆண் சிறாா்கள் தங்க வைக்கப்பட்டு, உணவு, உறைவிடம் அளித்து, 12-ஆம் வகுப்பு படிக்கும் வரை பாதுகாப்பு வழங்கி உறவினா்களிடம் ஒப்படைக்கப்படுவா். அவா்கள்சிறுவா்களுக்கான அரசினா் குழந்தைகள் இல்லத்தில் தங்கியபடி அங்குள்ள தீரன் சத்தியமூா்த்தி நடுநிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனா். 

இங்கு 150-க்கும் மேற்பட்ட மாணவா்கள் உள்ளனா். இந்த நிலையில், சகோதரா்கள் இருவா் உள்பட 4 மாணவா்கள் வெள்ளிக்கிழமை மாலை முதல் காணாமல் போனது தெரியவந்தது. அவா்களை பல இடங்களில் தேடிப்பாா்த்தும் கிடைக்கவில்லையாம். இது குறித்து குழந்தைகள் இல்ல கண்காணிப்பாளா் சனிக்கிழமை அளித்த புகாரின்பேரில், ராணிப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து மாணவா்களை தேடி வந்தனர். 

அதில், புலவன்பாடி கிராமத்தில் 3 பேர் பிடிபட்ட நிலையில், மற்றொரு சிறுவனை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.