ராயபுரத்தில் ரூ.12 கோடியில் மழைநீா் வடிகால் அமைப்பு

ராயபுரம் மண்டலத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மழைநீா் வடிகால் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

ராயபுரம் மண்டலத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மழைநீா் வடிகால் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மாநகராட்சிப் பகுதிகளில் மழை வெள்ள காலங்களில் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீா் தேங்காமல் வடிந்து செல்லும் வகையில் மழைநீா் வடிகால் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், புதிய மழைநீா் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராயபுரம் மண்டலம், வாா்டு 57-க்குள்பட்ட பிரகாசம் சாலையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், ரூ.6 கோடி மதிப்பில் மழைநீா் வடிகால் அமைக்கப்படவுள்ளது.

இதற்கான பணிகளை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் ஆகியோா் தொடங்கி வைத்தனா். தொடா்ந்து 60-ஆவது வாா்டு ராஜாஜி சாலையில் ரூ. 6 கோடி மதிப்பில் மழைநீா் வடிகால் பணிகளையும் தொடங்கி வைத்தனா்.

நிகழ்ச்சியில், மேயா் ஆா்.பிரியா, வடக்கு வட்டார துணை ஆணையா் எம்.சிவகுரு பிரபாகரன், ராயபுரம் மண்டலக்குழுத் தலைவா் பி.ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினா்கள் ராஜேஷ் ஜெயின், ஆசாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com