பிகார், ஜார்கண்ட், ஒடிசாவில் அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வும் மையம் எச்சரிக்கை

மே மாதத்தில் பிகார், ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் இயல்பை விட அதிகமான அனல் காற்று வீசக்கூடும் என்று வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிகார், ஜார்கண்ட், ஒடிசாவில் அனல் காற்று வீசும்: வானிலை ஆய்வும் மையம் எச்சரிக்கை


புதுதில்லி: மே மாதத்தில் பிகார், ஜார்கண்ட் மற்றும் ஒடிசாவில் இயல்பை விட அதிகமான அனல் காற்று வீசக்கூடும் என்று வானிலை அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வரும் நிலையில், நாட்டின் கிழக்கு பகுதிகளில் வரும் நாள்களில் அதாவது மே மாதத்தில் அனல் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக, பிகார், ஜார்கண்ட், ஒடிசா உள்ளிட்ட கிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளில் இயல்பை விட அதிகமான அளவில் அனல் காற்று வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், வடமேற்கு மற்றும் மேற்கு-மத்திய மாநிலங்களின் சில பகுதிகள் இரவு நேர வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும், பகல் வெப்பநிலை இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரப்பிரதேசத்தின் சில பகுதிகள் உள்பட நாட்டின் வடமேற்கு மற்றும் மேற்கு மத்திய பகுதிகளில் மே மாதத்தில் இயல்பைவிட அதிகமான மழை பொழிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

வடகிழக்கு பகுதிகளான கேரளம், ஆந்திரம் மற்றும் தெற்கு கர்நாடகாவின் பெரிய பகுதிகளில் இயல்பை விட குறைவான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மே மாதத்தில் சராசரி மழையளவு 61.4 மிமீ அளவில் இருக்கும்.

"மே மாதத்தில் பிகார், ஜார்கண்ட், ஒடிசா, கங்கை மேற்கு வங்காளம், கிழக்கு உத்தரப்பிரதேசம், கடலோர ஆந்திரம் மற்றும் வடக்கு சத்தீஸ்கரின் சில பகுதிகள், கிழக்கு மத்தியப் பிரதேசம், தெலங்கானா மற்றும் கடலோர குஜராத்தின் பெரும்பாலான பகுதிகளில் சாதாரண வெப்ப அலை இருக்கும் எதிர்பார்க்கப்படுகின்றன" என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மே மாத தொடக்கத்தில், நீண்ட கால சராசரியான 87 செமீ மழையில் 96 சதவீத மழைப்பொழிவுடன் இயல்பான பருவமழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com