தக்காளி விலை ரூ.40 குறைந்தது: இன்றைய நிலவரம்!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி கிலோவிற்கு ரூ.40 குறைந்து ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி கிலோவிற்கு ரூ.40 குறைந்து ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை தொடா்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக 70 முதல் 75 லாரிகளில் வந்த தக்காளி (சுமாா் 700 டன்) தற்போது 30 முதல் 35 லாரிகளில் (சுமாா் 350 டன்) மட்டுமே விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. இதனால், தக்காளி கடந்த சில நாள்களாக ரூ.150-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது.

திங்கள்கிழமை நிலவரப்படி கோயம்பேடு சந்தைக்கு 35 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.

இதனால் மொத்த விலையில், கிலோ தக்காளி ரூ,160-க்கும், சந்தையிலுள்ள சில்லரை விற்பனை கடைகளில் ரூ.180-க்கும், வெளியிடங்களிலுள்ள சில்லறை விற்பனை கடைகளில் ரூ.200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தக்காளி மற்றும் காய்கறிகளின் வரத்து அதிகரித்தால் மட்டுமே விலை குறைய வாய்ப்பு இருப்பதாக கோயம்பேடு சந்தை மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனா்.

இன்று  (ஆக. 1) முதல் மொத்தம் 500 நியாயவிலைக் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படவுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் சராசரியாக 10 முதல் 15 கடைகளில் நபருக்கு ஒரு கிலோ தக்காளி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com